Monday, 3 August 2015

காய்கறிகளும்... அதன் நன்மைகளும்...

நோய் இல்லாத ஆரோக்கியமான உடலைப் பெற அனைவரும் விரும்புவோம். அப்படி விரும்பினால் மட்டும் போதாது, காய்கறிகள், பழங்கள் என்று நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். குறிப்பாக அன்றாட சமையலில் பயன்படுத்தும் காய்கறிகளில் அத்தியாவசிய சத்துக்களான பொட்டாசியம், நார்ச்சத்து, போலேட் மற்றும் வைட்டமின்களில் ஏ, ஈ மற்றும் சி போன்றவை அதிக அளவில் நிறைந்துள்ளன. இத்தகைய சத்துக்கள் அனைத்தும் ஒவ்வொருவருக்கும் மிகவும் இன்றியமையாதது. மேலும் இந்த சத்துக்கள் அனைத்தும் ஒரே காய்கறியில் இருக்காது. ஆகவே அனைத்து விதமான காய்கறிகளையும் உணவில் சேர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு காய்கறியிலும் ஒவ்வொரு சக்தியானது உள்ளது. ஆகவே இங்கு எந்த காய்கறியில் என்ன சத்துக்கள் நிறைந்துள்ளன என்றும், அந்த காய்கறியை உணவில் சேர்த்தால் என்ன நன்மைகளைப் பெறலாம் என்றும், காய்கறிகளையும், அதன் நன்மைகளையும் பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா


முருங்கைக் காய்








முருங்கைக் காய் உடலுக்கு சிறந்த, ஆரோக்கியத்தைத் தரக்கூடியது. இதில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. இதன் கீரை மிகவும் சுவையாக இருக்கும். அப்படிப்பட்ட முருங்கையை பிடிக்காத மனிதர்களே இந்த உலகத்தில் இல்லை எனலாம். இது பல மருத்துவ குணங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. இதை ஒரு மூலிகை மரம் என்றும் சொல்லலாம். இந்த முருங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு நன்மைகளை கொண்டுள்ளது. இது உடலின் பல விதமான நோய்களைக் கட்டுப்படுத்தி குணப்படுத்துகிறது. ADVERTISEMENT முருங்கையின் நன்மைகள் : 1. முருங்கை இலையை பொரியல் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல், கண்நோய், பித்த மயக்கம் போன்றவை வராது. மேலும் இந்த பொரியலை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்மை பெருகும். அப்படி பொரியல் செய்யும் போது அதில் புளி, எலுமிச்சை பழச்சாறு போன்றவற்றை சேர்க்கக் கூடாது. 2. பெண்கள் முருங்கை இலையை சாறு பிழிந்து இரு வேளை குடித்து வந்தால், அடிவயிற்றில் ஏற்படும் வலியும், விலக்கு தள்ளிப் போவதால் ஏற்படும் வலியும் குணமாகும். 3. குழந்தைகளுக்கு முருங்கை இலைச் சாற்றை பிழிந்து 10 மில்லி தினமும் இரு வேளை கொடுத்தால், உடலானது ஊட்டம் பெறும். 4. முருங்கை பிஞ்சை சமைத்து சாப்பிட்டால் எலும்புருக்கி, சளி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லது. 5. மேலும் முருங்கை இலையை மட்டும் போட்டு மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால், உடல் தளர்ச்சி அடைந்தாலோ, உடல் வலி இருந்தாலோ குணமடையும். 6. குடற்புண், டைபாய்டு, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், முருங்கைப்பட்டைத் தூள், சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றை பொடி செய்து, வெந்நீரைக் காய்ச்சி, அந்த பொடியைப் போட்டு கலக்கி, மூன்று வேளையும் சாப்பிட்டால், அவை சரியாகும். ஆகவே முருங்கையை சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருங்க!!! 
பூண்டு
.
உண்ணும் உணவில் நல்ல மணத்தையும், ருசியையும் தரும் பூண்டு இதயத்தை பாதுகாக்கும் திறன் கொண்டது. மேலும் வெங்காயக் குடும்பத்தைச் சேர்ந்த பூண்டு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது. ஒரு பூண்டில் 6 முதல் 35 பூண்டுப் பற்கள் உள்ளன. 100 கிராம் பூண்டில் தண்ணீ­ர்ச் சத்து 62.0 விழுக்காடும், புரோட்டின் சத்து 6.3 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 1.0 விழுக்காடு, நார்ச்சத்து 0.8 விழுக்காடும், கார்போஹைட்ரேட்ஸ் 29.8 விழுக்காடும் உள்ளது. மேலும் கால்சியம் 30 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 310 மில்லி கிராமும் இரும்பு 1.3 மில்லி கிராமும், வைட்டமின் சி 13 மில்லி கிராமும் சிறிதளவு வைட்டமின் பி குரூப்களும் உள்ளன. இத்தகைய மருத்துவக் குணங்கள் நிறைந்த பூண்டை எல்லாவகை உணவுகளிலும் சேர்த்து சாப்பிட்டால் இதய நோயைக் கட்டுபடுத்தலாம் என்று விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் கூறியுள்ளனர்.  பூண்டு வாயுப் பிடிப்பை நீக்கி இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ரால், கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும். இதனால் நம் உடல் முழுவதும் இரத்தம் தடையின்றி சுற்றுவதால் செல்களுக்குத் தேவையான உணவும் ஆக்ஸிஜனும் கிடைத்து இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சு வாங்குதல் ஆகியவற்றை சீராக்குகிறது. காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்­ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும். இந்தப் பூண்டுப் பாலை காலையும் இரவு தூங்குவதற்கு முன்பும் சாப்பிட்டால் சளி, இருமல், வாயு போன்ற அனைத்து நோயும் சரியாகும். ஆகவே பூண்டை சாப்பிடுவோம்! இதயத்தைப் பாதுகாப்போம்!
  

வெண்டைக்காய்


அறிவையும், அழகையும் அதிகரிக்கும் வெண்டைக்காய்!


பரீட்சை காலமாக இருப்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வெண்டைக்காயை வதக்கி சாப்பிடக் கொடுப்பார்கள். மூளை சுறுசுறுப்பாய் செயல்பட வெண்டைக்காய் உதவி புரியும் என்பதே இதற்குக் காரணம், இதில் உள்ள உயர்தரமான பாஸ்பரஸ் புத்திக் கூர்மையை அதிகரிக்கச் செய்கிறது! உயர்தரமான பாஸ்பரசுடன் ஒட்டிக் கொள்ளக்கூடிய ஒருவிதமான தாவர பசைப்பொருளும், நார்ப்பொருளும் வெண்டைக்காயில் உள்ளது; எளிதில் இரத்தத்தால் உட்கிரகிக்கப்பட்டு சக்தியாக மாறும் மாவுச்சத்தும் வெண்டைக்காயில் உள்ளன. ADVERTISEMENT வெண்டைக்காயின் தாவரவிஞ்ஞானப்பெயர், ஹைபிஸ்கஸ் எஸ்குலேன்ட்டஸ். இதன் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர். அமெரிக்காவில், இளசான வெண்டைக்காயை நறுக்கி, முட்டையில் தோய்த்து, ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி, எண்ணெயிலிட்டு பொரித்து சாப்பிடுகிறார்கள். அதேபோல், முற்றிய வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவிலுள்ள பல மாநிலங்களிலும் இன்னும் சில நாடுகளிலும் வெண்டைக்காய் விதையை காபிப் பொடியாகப் பயன்படுத்துகிறார்க்ள. கொழுப்பை கரைக்கும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது. 100 கிராம் வெண்டைக்காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது. கொழ கொழ காய் வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன. சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும். வாய்நாற்றம் அகலும் வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும். ஆண்மையை அதிகரிக்கும் வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவுகிறது. இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்களின் ஆண்மையும் பெருகும். சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந்தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது. நன்மை தரும் பாக்டீரியா இதில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன. தயிரில் உள்ளதைப்போல இந்த பாக்டீரியாக்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன. இதில் வைட்டமின் பி காணப்படுகிறது. வெண்டைக்காயை குழந்தைகளுக்கு வதக்கி உணவில் சேர்த்து தரலாம். வெண்டைக்காயில் உயர்தர லேக்ஸடிவ் (laxative.) உள்ளது. இது உடல் நலனுக்கு ஏற்றது. அல்சரை கட்டுப்படுத்துகிறது. வாய்வு கோளாறுகளை தடுக்கிறது. வெண்டைக்காயை நன்றாக வேக வைத்து அந்த தண்ணீரை கூந்தலில் தடவி வர கூந்தல் உதிர்தலை தடுக்கும். இது குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும். மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. எனவே, புத்திக்கூர்மை அதிகரிக்க அனைத்து வயதினரும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மினுமினுப்பான தோலையும் பெறலாம். சுறுசுறுப்பாகவும் வாழலாம்.


இஞ்சி

சமையலறையில் மருத்துவப் பொருள் - இஞ்சி
இந்திய சமையலில் இஞ்சிக்கு தனி பங்கு உண்டு. உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்யவதோடு பித்தம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதால் அனைத்து வகையான சமையலிலும் இஞ்சி இடம்பிடித்துள்ளது. நமது வாழ்க்கையில் மஞ்சளுக்கு அடுத்தபடியாக அதிகம் உபயோகப்படக்கூடியது வகிக்கக்கூடியது இஞ்சி மற்றும் சுக்கு. மஞ்சளைப் போலவே வடிவம் கொண்டது. உலர்ந்த இஞ்சியே சுக்கு எனப்படுகிறது. ADVERTISEMENT வேதிப்பொருள் இத்தாவரத்தின் மருத்துவப் பயன்களுக்கு அடிப்படையாக இருப்பவை எளிதில் ஆவியாகும். எண்ணெய்கள் மற்றும் ஓலியோரெசின்களாகும். ஜின்சிபெரின், ஜின்ஜிரால் மற்றும் செயல்பாட்டு வேதிப்பொருள்களாக உள்ளன. பித்தம் தொடர்புடைய நோய்களுக்கு சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் ' பேசில்லஸ்" பாக்டீரியா தோற்றுவிக்கும் வயிற்றுப்போக்கினைத் தடுக்கும் திறன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அஜீரணம், வயிற்று உப்புசம், குடல்வலி, ஆகியவற்றிர்கு மருந்தாக பயன்படுகிறது. காலைநோய் எனப்படும் தலைச்சுற்றல் - வாந்தி போக்கக்கூடியது.. கிருமிகளுக்கு எதிரானசெயல், வயிற்று நோய்கள், மற்றும் சிலவகை உணவு நச்சுத்தன்மையாக மாறுவதை தடுக்கும். இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது. மாரடைப்பு, ஆஸ்துமா குணமாகும் இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர். இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் ஒரு அவுன்ஸ் எடுத்து தேனில் கலந்து கொடுத்தால் ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும். இந்த முறையில் வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதில் மாதுளம் பழரசம் சேர்த்துக் கொடுத்துவர இருமல், மூச்சிரைப்பு (ஆஸ்துமா) குணமாகும் முகப்பொலிவிற்கு இஞ்சி - தேன் இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோல் சீவிப்போட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போட்டு சுத்தமான தேனும் 150 கிராம் விட்டு நான்கு நாள் கழித்துத் தினம் காலையில் வெறும் வயிற்றில் ஒரிரண்டு துண்டுகள் தொடர்ந்து 1 மண்டலம் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகி, பித்தம் கட்டுப்படும். ஆயுள் பெருகும். முகப்பொலிவும் அழகும் உண்டாகும். மனதிடம், நெஞ்சு உரம் பெறும். இஞ்சி முறபா மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்த தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து வரும் இரைப்பு போன்றவை குணமாகும். சர்க்கரை நோய்க்கு மருந்து இஞ்சி கஷாயம் கால் டம்ளர் 20 கிராம் கற்கண்டு தூள் செய்து சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து அரைக்கால் படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வர பித்த ரோகங்கள், பித்த சம்பந்தப்பட்ட வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும். அத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவு சர்க்கரை மூலம் கழிவதை தடுத்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவதும் நிற்கும். வலி நிவாரணி வாந்தியுடன் கூடிய மயக்கத்தை போக்குகிறது. பயணநோய், மற்றும் அறுவை சிகிச்சைக்குப்பின்னர் ஏற்படும் வாந்தி மயக்கத்திற்கு சிறந்த மருந்து. தசைவலி மற்றும் பல்வலி, முகத்தில்வலி ஆகியவற்றிர்கு காய்ந்த தரையடித் தண்டு ( சுக்கு) தண்ணீரில் இழைத்து பசையினை நெற்றியில் பற்று போட்டால் வலி குணமடையும்


வெங்காயம்

வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

பற்களுக்கு நல்லது வெங்காயம் பெரும்பாலும் பல் சிதைவு மற்றும் வாய் நோயை தடுக்க பயன்படுத்தப்படுகிறது. அதிலும் 2-3 நிமிடங்கள் வெங்காயத்தை வாயில் போட்டு மெல்லுவதால், வாய் கிருமிகளை அழிக்க முடியும்.

வெங்காயம் என்றாலே அனைவரும் பயப்படுவது அதிசயம் இல்லாத ஒன்றுதான். வெங்காயம் வெட்டினாலே கண்ணிலிருந்து கண்ணீர் வரும் என்று தான் நாம் அனைவரும் அறிகின்றோம். ஆனால் அவற்றில் இருக்கும் மருத்துவ குணத்தை யாரும் அறிவதில்லை. இயற்கை நமக்கு அளித்துள்ள ஒரு வரப்பிரசாதம் தான் வெங்காயம். இவை பூச்சிக்கடி, ஆஸ்துமா, சளி, கபம் போன்ற நோய்களிலிருந்து நம்மை காக்கும். சங்க காலத்திலிருந்தே வெங்காயத்தின் மருத்துவ குணத்தை மருத்துவர்கள் அறிந்துள்ளனர். பசியுணர்வு இல்லாதவர்கள் வெங்காயத்தை உண்பதால் பசி உணர்வு தூண்டப்பட்டு, உடலின் அழற்சி நீக்கப்பட்டு, உடலுக்கு தேவையான புத்துணர்ச்சி அளிக்கப்படுகின்றது.  மிளகை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! வெங்காயத்தில் கால்சியம், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன. அவை உடலுக்கு மிகவும் நல்லது. ஈர மணலில் வெங்காயம் வளர்க்கப்படுகின்றது. சுவையான மற்றும் சத்தான சமையலுக்கு வெங்காயம் மிகவும் அவசியம். இதை சுற்றி மற்ற காய் செடிகளை வளர்க்கும் போது இவை நன்றாக வளர்கின்றது. இத்தகைய மருத்துவ குணம் நிறைந்த வெங்காயத்தின் சிறப்புகளைப் பார்ப்போம்.
இதய நோய்களுக்கு சிகிச்சை வெங்காயம் இரத்த சிவப்பணுக்களை சுத்திகரித்து, இரத்த அழுத்தத்தை போக்கி, ஆரோக்கியமாக வாழ வழி செய்கின்றது. முக்கியமாக இதய நோய் மற்றும் மற்ற இதயம் சார்ந்த கோளாறுகளை தடுக்கின்றது.
பொலிவான சருமம் வெங்காயச் சாற்றுடன் தேன் அல்லது ஆலிவ் எண்ணெய் கலந்து, முகப்பரு இருக்கும் இடத்தில் தடவினால், பிறகு பாருங்கள் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி, முகம் பொலிவாக காணப்படும்.
இருமலுக்கு சிகிச்சை வெங்காயம் கடுமையான இருமலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நல்லது. அதிலும் வெங்காயச் சாறு மற்றும் தேன் கலவையை சம அளவில் எடுத்துக் கொண்டு சாப்பிட்டால், தொண்டை புண் மற்றும் இருமல் குணமடையும்.

புற்றுநோய் வெங்காயத்தை அதிகம் சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு
காது வலிக்கு நிவாரணம் காது வலி இருந்தால், அப்போது வெங்காயச் சாற்றினை காதுகளில் ஊற்றினால், காது வலி குறையும். அதிலும் காதில் ஒலி கேட்பது போன்ற இடர்பாடு இருப்பின், பருத்தி கம்பளி மூலம் காதில் வெங்காய சாற்றை ஊற்றினால் போதும் தானாக மறைந்து விடும்.
பாலுணர்ச்சியை அதிகரிக்கும் வெங்காயம் ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கைக்கு உகந்தது. அதிலும் இஞ்சி சாறு ஒரு தேக்கரண்டி எடுத்து, அதனுடன் வெங்காயச் சாறு சேர்த்து ஒரு நாளுக்கு மூன்று முறை எடுத்துக் கொண்டால், லிபிடோ மற்றும் பாலியல் உணர்ச்சியானது

வயிறு வலி நிவாரணம் வெங்காயம் வயிறு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தீர்வளிக்கும். ஏனெனில் இதில் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும், ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் இருப்பதால், வெங்காயத்தை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ள 
சிறுநீர் கோளாறுகளை தீர்க்கும் சிறுநீர் கழிக்கும் போது, எரிச்சல் உணர்வு சிலருக்கு ஏற்படும். வெங்காயம் இதற்கு நல்ல தீர்வு தரும். அதற்கு 6 முதல் 7 கிராம் வெங்காயத்தை எடுத்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை குடிக்க வேண்டும். பின்பு பாருங்கள் சிறுநீர் கோளாறுகள் மறைந்துவிடும்.


தக்காளியில் உள்ள வியக்கத்தக்க 9 நன்மைகள்!!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பும் ஒரு காய் வகை தான் தக்காளி. இதில் உள்ள சிறப்பம்சமே இதனை பச்சையாகவே உண்ணலாம். அப்படிப்பட்ட தக்காளி என்றால் உங்கள் நினைவுக்கு வருவது அதன் இனிப்பு மற்றும் சுவை தான். அது உடல்நலத்திற்கு நன்மையை விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியும் தானே. சரி அது ஏன் ஆரோக்கியமான உணவாக விளங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?... அதிலுள்ள வைட்டமின் சி சத்தின் காராணமாகவா? குறைந்த கலோரிகள் உள்ளதாலா? கொழுப்பு இல்லாததாலா? ஆம்! ஆம்!! ஆம்!!! ஆனால் அதையும் தாண்டி இன்னமும் கூட சில காரணங்கள் உள்ளது. ADVERTISEMENT சரி, தக்காளி ஏன் ஆரோக்கியமான தேர்வாக உள்ளது என்பதை பற்றி பார்க்கலாமா? சிவந்த, பழுத்த தக்காளியை ஒரு கப் (150 கிராம்) அளவிற்கு உண்ணும் போது, போதுமான அளவு வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் கிடைக்கும். இயற்கையாகவே தக்காளியில் சோடியம், சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைந்த அளவில் இருக்கிறது. உயிர்ச்சத்து பி1, நியாசின் உயிர்ச்சத்து, வைட்டமின் பி6, மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரமும் தக்காளியில் உள்ளதால், அது ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணையாக நிற்கும். இது போக 150 கிராம் தக்காளியில், 2 கிராம் நார்ச்சத்து உள்ளது. தினமும் பரிந்துரைக்கப்படும் அளவில் 7 சதவீத நார்ச்சத்து இதில் இருந்தே கிடைத்துவிடுகிறது. தக்காளியில் நீர்ச்சத்தும் அதிகமாக உள்ளது. அதனால் அது வயிற்றையும் நிரப்பிவிடும். மேலும் இரத்தக் கொதிப்பு, அதிக கொழுப்பு, வாதம் மற்றும் இதய நோய்களில் இருந்தும் தக்காளி காக்கும். சத்தான ஊட்டச்சத்தின் கலவையாக தக்காளி விளங்கினாலும், அதையும் மீறி இன்னும் இதில் பல நன்மைகள் அடங்கியுள்ளது.
ஆரோக்கியமான சருமம்
 வலுவான எலும்புகள் 
வலுவான எலும்புகள் பெறுவதற்கு தக்காளி பெரிதும் உதவும். தக்காளியில் உள்ள வைட்டமின் கே மற்றும் கால்சியம் எலும்பை திடமாக வைத்து, எலும்புகளில் ஏற்படும் கோளாறுகளையும் சரிசெய்யும். மேலும் இதிலுள்ள லைகோபீன், எலும்பின் பொருண்மையை மேம்படுத்தும். எலும்புப்புரை நோய்களை எதிர்த்து போராடவும் இது உதவும்.
புற்றுநோய்க்கு 
எதிராக போராடும் இயற்கையாகவே தக்காளி புற்றுநோய்க்கு எதிராக போராடும் குணத்தை கொண்டவ. மீண்டும் லைகோபீன் தான் இதற்கும் துணை புரிகிறது. அதிலும் புரோஸ்டேட் புற்றுநோய், கர்ப்பவாய் புற்றுநோய், வாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், வயிற்று புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய், குடல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்ற பல வகையான புற்றுநோய்களில் இருந்து காக்கும். அணுக்களை பாதிப்படையச் செய்யும் இயக்க உறுப்பு கோளாறுகளை எதிர்த்து போராடும் வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் தக்காளியில் உள்ளது.


நீரிழிவு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரியான அளவில் வைத்திருக்கவும் தக்காளி உதவுகிறது. ஏனெனில் தக்காளியில் குரோமியம் வளமையாக உள்ளதால், அது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்
பார்வை கோளாறு தக்காளி கண் பார்வையையும் மேம்படுத்தும். தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ, கண் பார்வையை மேம்படுத்தி மாலை கண் வியாதி வராமல் தடுக்கும். மேலும் இது குணப்படுத்த முடியாத கோளாறான மாக்குலர் டி-ஜெனரேஷன் வரும் ஆபத்தையும் தடுக்கும்.
சிறுநீரக கற்கள் மற்றும் பித்தக்கற்கள் உருவாவதை தடுக்கும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதையும், பித்தக்கற்கள் உருவாவதையும் தக்காளி தடுக்கும். அதிலும் தக்காளியை கொட்டை இல்லாமல் உண்ணுபவர்களுக்கு, சிறுநீரகக் கற்கள் மற்றும் பித்தக் கற்கள் உருவாவது தடைபடும் என்று சில ஆய்வுகள் கூறுகிறது
கடுமையான வலி
 கடுமையான வலிகளுக்கு தக்காளி ஒரு நிவாரணியாக விளங்குகிறது. லேசானது முதல் கடுமையான வலியை (கீல்வாதம் அல்லது முதுகு வலி) சந்திக்கும் லட்சக்கணக்கான மக்களில் நீங்களும் ஒருவரா? அப்படியானால் தக்காளி உங்களுக்கு உதவி புரியும். தக்காளியில் உள்ள பயோஃப்ளேவோனாய்ட்டுகள் மற்றும் கரோடினாய்டுகள் அதிகமாக உள்ளதால், அழற்சி ஏற்படாமலும் தடுக்கும். கடுமையான வலி என்றால் அதில் கடுமையான அழற்சியும் அடங்கும். அதனால் அழற்சிக்கு எதிராக போராடினால் இவ்வகை வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்


எடையை குறைக்க... 
 தக்காளி உடல் எடையை குறைக்க உதவும். எனவே எடையை குறைக்க டயட்டில் இருந்தால், கண்டிப்பாக தினமும் பல தாக்காளிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். சிறந்த உணவாக விளங்கும் இது, சாலட் மற்றும் சாண்ட்விச்சாகவும் விளங்கும். தக்காளியில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், அவை எடையை குறைக்க உதவுவதோடு, வயிற்றையும் நிறைக்கும். மேலும் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ள உணவாகவும் இது விளங்கும்
உருளைக்கிழங்கு உண்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

பல வகையான கிழங்கு வகைகள் உள்ளன. அதில் முக்கியமான ஒரு கிழங்காகவும், அனைவருக்கும் பிடித்த கிழங்காகவும் கருதப்படுவது உருளைக்கிழங்கு. இத்தகைய உருளைக்கிழங்கை விரும்பாதவர்களே இருக்க முடியாது. உருளைக்கிழங்கு இல்லாத காய்கறியை நினைத்துப் பார்க்க முடிகிறதா? முடியாதல்லவா... உருளைக்கிழங்கு இல்லாத சமையலறையே இருக்காது. சொலானம் ட்யூபரோசம் என்ற விஞ்ஞான பெயரைக் கொண்ட இக்கிழங்கு ஒரு சீரான உருவமே இல்லாமல் அழகற்றதாக இருக்கும். இப்படி இருந்தும் அதனை ஈர்க்கும் பொருட்டு நம் மீது ஏதோ மந்திரத்தை இது தூவியிருக்க வேண்டும். உருளைக்கிழங்கு விரும்புபவர்களுக்கும் சரி, அதை விரும்பாதவர்களும் சரி, அதனை சமமான அளவு நேசித்தே ஆக வேண்டும். ஏனென்றால் வெறும் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் தவிர, அதிலிருந்து அவிழ்க்கப்பட வேண்டிய ரகசியங்கள் மேலும் உள்ளன. ADVERTISEMENT இத்தகைய இரகசியங்கள் என்னவென்று பார்க்கலாம். ஆனால் அதற்கு முன்பு அதில் உள்ள தீமைகளையும் அனைவரும் அறிந்ததாக வேண்டும். அது என்னவென்றால், உருளைக்கிழங்கு உண்ணுவதில் சிறு அச்சமும் இருக்க வேண்டும். பச்சை உருளைக்கிழங்கு நச்சுத்தன்மை உடையது. அதே போல் உருளைக்கிழங்கின் இலைகள் மற்றும் பழங்களும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. அதில் ஓலனைன், சாக்கோனைன் மற்றும் ஆர்செனிக் போன்ற அல்கலாய்டுகள் உள்ளதால், இவை அதிக அளவு உடலினுள் சென்றால் பெரும் ஆபத்தை விளைவிக்கும். சரி, இப்போது அதன் நன்மைகளை ஒவ்வொன்றாக பார்ப்போமா!!! 

எடை கூடுதல் உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் மற்றும் சிறிதளவு புரதமும் நிறைந்துள்ளது. ஆகவே ஒல்லியாக இருப்பவர்களின் எடையை அதிகரிப்பதற்கு, 
உருளைக்கிழங்கு உறுதுணையாக இருக்கும்.
செரிமானம் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், அது சுலபமான செரிமானத்திற்கு உதவியாக இருக்கும். அதனால் நோயாளிகள், குழந்தைகள் மற்றும் செரிமானமின்மையால் கஷ்டப்படுபவர்களுக்கு இது சிறந்த உணவாய் விளங்குகிறது.
கீழ்வாதம் இங்கு இதை இரண்டு கோணங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கில் வைட்டமின்கள், கால்சியம் மற்றும் மெக்னீசியம் இருப்பதால், இது கீழ்வாதம் நோய்க்கு ஒரு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. வேக வைத்த உருளைக்கிழங்குகளின் தண்ணீர் கீழ்வாதத்திற்கு நிவாரணியாக இருக்கிறது. அனால் இதில் ஒரு சங்கடமும் உண்டு. ஸ்டார்ச் அல்லது கார்போஹைட்ரேட் அளவு உருளைக்கிழங்கில் அதிகளவு இருப்பதால், பொதுவாக உடல் எடையை அதிகரிக்க செய்யும். இதுவே கீழ்வாதம் உள்ளவர்களுக்கோ கேடாக போய் முடியவும் வாய்ப்புள்ளது.


அழற்சி/வீக்கம் உட்புற மற்றும் வெளிப்புற வீக்கம் மற்றும் அழற்சிக்கு ஏற்ற மருந்தாக விளங்குகிறது உருளைக்கிழங்கு. இது மிகவும் மென்மையாக, எளிதில் செரிமானம் செய்யக்கூடியதாக இருக்கும். மேலும் இதனுள் அதிகமாக வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 இருப்பதால், குடல்களில் மற்றும் செரிமானம் அமைப்பில் ஏற்பட்டிருக்கும் அழற்சியை சரி செய்யும்.
வாய் புண் வாய் புண் உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு ஒரு சிறந்த உணவாக இருக்கும். பச்சை உருளையை அரைத்து வாய் புண்களின் மேல் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.
மூளை செயல்பாடு மூளையின் நல்ல செயல்பாட்டுக்கு குளுக்கோஸ், ஆக்ஸிஜன் வரத்து, வைட்டமின் பி-யின் சில வகைகள், சில ஹார்மோன்கள், அமினோ அமிலம் மற்றும் ஒமேகா-3 போன்ற கொழுப்பமிலம் ஆகியவைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. உருளைக்கிழங்கு மேற்கூறிய அனைத்தையும் தருவதால் மூளையின் செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகிறது

இதய நோய்கள் உருளைக்கிழங்குகளில் வைட்டமின்கள், கனிமங்கள் போன்றவைகளைத் தவிர காரோட்டினாடய்டு என்ற பொருளும் உள்ளன. இது இதயம் மற்றும் உட்புற உறுப்புகளுக்கும் மிகவும் நல்லது. இருப்பினும் இது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கூட்டுவதாலும், இதை அதிகம் உட்கொண்டால் உடல் பருமன் அதிகரித்து விடும். இதனால் இதயத்தில் அதிக அழுத்தம் ஏற்படும். எனவே மிகவும் குண்டாக இருப்பவருக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் இது உகந்த உணவு அல்ல.
வயிற்றுப் போக்கு வயிற்றுப் போக்கினால் அவதிப்படுவோருக்கு இது ஒரு வளமான ஆற்றல் கொண்ட உணவாகும். ஏனென்றால் இதில் சுலபமாக செரிமானமாகிவிடும் ஆற்றல் இருக்கிறது. இருப்பினும் இதை அதிகமாக உட்கொண்டால் அதிக அளவு ஸ்டார்ச் உடலின் உள்ளே செல்லுவதால் வயிற்றுப்போக்கு அதிகரிக்கச் செய்யும்.
எரிகாயம் உருளைக்கிழங்கின் சாறை, எரிகாயம், சிராய்ப்புகள், சுளுக்கு போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க உபயோகிக்கலாம்.

No comments:

Post a Comment